உக்ரைனில் பயங்கர தாக்குதல் – 51பேர் பலி: ஐ.நா பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
குறைந்தது 51 பேரைக் கொன்ற ஹ்ரோசா மீதான தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் “கடுமையாக கண்டனம்” தெரிவித்துள்ளார்.
“பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
குப்யான் மாவட்டத்தில் உள்ள ஹ்ரோசா என்ற கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அங்கு ரஷ்யப் படைகள் சமீபத்தில் தாக்குதல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
சுமார் 330 பேர் கொண்ட சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டலில் நினைவஞ்சலி நடத்தியதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.