சிரிய இராணுவ அகாடமியை குறிவைத்து தாக்குதல் : 100 பேர் பலி!
சிரிய இராணுவ அகாடமியில் நேற்று (05.10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகள்” “இராணுவ அகாடமியின் அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவை” குறிவைத்ததாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, “100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பாதிப்பேர் இராணுவத்தினர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. குறைந்தது 125 பேர் காயமடைந்ததாக அது கூறியது.
சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)





