ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து தாக்குதல்!
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை ஆளில்லா விமானம் தாக்கி சேதப்படுத்தியதாக ரஷ்ய அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய ஆளில்லா விமானத்தால் அடுக்குமாடி கட்டிடம் தாக்கப்பட்டதாக Mash செய்தி தளம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.





