பாகிஸ்தானில் துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல்!
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் (Peshawar) உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். முதல் நபர் பிரதான நுழைவாயிலில் தாக்குதலை நடத்தியதாகவும் மற்றவர் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
காவல்நிலையத்திற்குள் தாக்குதல்தாரிகள் இருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில், அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியூடான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




