நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து தாக்குதல் : படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள்!
வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நைஜீரிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் புபா, சொகோடோ மாநிலத்தின் சிலமே பகுதியில் உள்ள லகுராவா கிளர்ச்சிக் குழுவின் தளவாட தளத்தை விமானப்படை குறிவைத்ததில் கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன.
கடந்த ஆண்டு, வடமேற்கு நைஜீரியாவில் மதக் கூட்டத்தை குறிவைத்து ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 85 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
(Visited 1 times, 1 visits today)