ஐரோப்பா

ரஷ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – தளபதி உட்பட 34 பேர் பலி

கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் செவஸ்டபோலில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்போது முக்கியள் தளபதி உள்ளிட்ட 34 அதிகாரிகள் உயிரிழந்ததுடன் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடம் திருத்தமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் விபரங்களை வெளியிடாத போதிலும் உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் , கொல்லப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளார்.அதன்படி அட்மிரல் விக்டர் சொக்கொலொவ் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என உக்ரைனின் உள்துறை அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்