ஆசியா

வடமேற்கு பாகிஸ்தானில் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற வாகனத் தொடரணியின் மீது தாக்குதல் ; ஐவர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் குர்ராம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் பழங்குடியின குழுக்களுக்கு இடையே கலவரம் நடைபெற்று வருகிறது.

அம்மாவட்டத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஷியா மற்றும் சன்னி பிரிவை சேர்ந்த பழங்குடியினர்கள் இடையே நடைபெற்று வரும் இந்த மோதலில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட குர்ராம் மாவட்டத்திற்கு நேற்று வாகனங்களில் உணவு, மருந்து உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, அந்த வாகனங்களை குறிவைத்து துப்பாக்கி சூடு, ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 2 பேர், லொரி டிரைவர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் 5 டிரைவர்களை கடத்தி சென்றனர். மேலும், நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்