புட்டினின் இல்லம் மீதான தாக்குதல் – வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்திய ரஷ்யா!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை உக்ரைன் மறுத்துள்ள நிலையில், ரஷ்யா தொடர்புடைய காணொளியை வெளியிட்டுள்ளது.
தாக்குதலில் 91 உக்ரைனிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேற்படி ட்ரோன் தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வழிவகுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov) கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ரஷ்யாவின் கூற்றுக்களை உறுதிப்படுத்த, புவிசார் இருப்பிட வீடியோக்கள் அல்லது காணக்கூடிய வான் பாதுகாப்பு செயல்பாடு போன்ற திறந்த மூல ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





