யாழில் பொலிஸார் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (29) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழுவாக நின்றவர்களை சோதனையிட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயன்றுள்ளனர்.
இதன்போதே பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 05 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)





