உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் மீது தாக்குதல் – நெதன்யாகுவுக்கு என்ன ஆனது?

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் டெல் அவிவ் அலுவலகத்தின் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் இன்று அறிவித்துள்ளன.

ஹைஃபாவில் (Haifa) உள்ள பாதுகாப்பு மற்றும் இராணுவ மையங்கள், கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் கைபார் (Kheibar) ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை கண்டறிந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தலைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கு ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், மோதலைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் ஈரானில் சுமார் 555 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!