ஈராக்கின் இராணுவ தளத்தின் மீது தாக்குதல் : மறுக்கும் இஸ்ரேல்!

ஈராக்கின் இராணுவ தளத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது ஈராக் குற்றம் சாட்டிய போதிலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன.
இருப்பினும் சரியான விபரங்கள் வெளியாகவில்லை. எவ்வாறாயினும் ஈராக் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றங்களை மேலும் அதிகரித்துள்ளது.
ஈராக்கில் நடந்த சம்பவம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தத்துடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
(Visited 26 times, 1 visits today)