குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கைது
பல்கலைக்கழக விடுதி ஒன்றில் ரம்ஜான் தொழுகையின் போது வெளிநாட்டு மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதையடுத்து 5 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு இந்தியாவில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகை நடைபெறும் இடம் பற்றிய கடுமையான வாக்குவாதம் உடல் தாக்குதலுக்கு வழிவகுத்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐந்து மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றவாளிகளுக்கு எதிராக குஜராத் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.





