காஸாவில் நடந்த கொடூரம் – உலக நாடுகள் கண்டனம்
காஸாவில் உணவு வாகனத்தை நோக்கிச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தச் சம்பவத்தில் சுமார் 100 பேர் மாண்டதாய் ஹமாஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பவம் குறித்து சுயேச்சை விசாரணையை உடனடியாக நடத்த ஐக்கிய நாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ்-இஸ்ரேல் போரில் நடந்துள்ள அண்மைச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) கூறினார்.
மனிதநேய அடிப்படையில் சண்டை நிறுத்தம் உடனடியாக வேண்டும் என்பதில் தாம் இன்னும் உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான பாலஸ்தீனத் தூதர் அண்மை மரணங்களுக்குப் பாதுகாப்பு மன்றம் கண்டனம் தெரிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.
அப்படிச் செய்யத் தவறுவதால் உயிர்கள் பலியாவதை அவர் சுட்டினார். அண்மைச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.
இஸ்ரேல் மனித நேயத்துக்கு எதிராகக் குற்றம் புரிவதாய்த் துருக்கியே குற்றஞ்சாட்டியது.