பிரித்தானியாவுக்குச் செல்லும் வழியில் கப்பல் கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் பலி!
பிரித்தானியாவுக்குச் செல்லும் வழியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 12 புலம்பெயர்ந்தோர் இறந்தனர் என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் கூறியுள்ளார்.
இன்னும் இரண்டு பேரைக் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சட்டவிரோத குடியேற்றத்தைக் கையாள்வது பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் முன்னுரிமையாக உள்ளது.
பிரிட்டன் அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஏழு நாட்களில் 2,000க்கும் அதிகமானோர் சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
கடந்த வாரம், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர், புலம்பெயர்ந்தோர் கடத்தல் வழிகளை அகற்றுவதற்கு ஒன்றாக இணைந்து செயல்படுவதாக உறுதியளித்தனர்.
உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பலியானவர்கள் முக்கியமாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், பலர் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் சில குழந்தைகளும் இருப்பதாக தர்மானின் மேலும் கூறியுள்ளார்.