பிரித்தானியாவில் இருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படமாட்டார்கள் : புதிய திட்டத்தை அறிவித்த தொழிற்கட்சி!
பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் எதுவும் இருக்காது என சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைப்பதற்கான கன்சர்வேடிவ்களின் முதன்மைத் திட்டத்திலிருந்து விடுபட தொழிற்கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“விமானங்கள் இல்லை, ருவாண்டா திட்டம் இல்லை, இது ஒரு வித்தை, இது மிகவும் விலை உயர்ந்தது, இது வேலை செய்யாது என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவற்காக சர் கெய்ர் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார்.
அதாவது புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான புலனாய்வாளர்களை கொண்ட புதிய எல்லைப் பாதுகாப்புக் கட்டளையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சர் கீர் ஸ்டார்மரின் கருத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பாசாங்கு தன்மை என கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.