ஐரோப்பா

புதிய விதிகளின்படி புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்ப முடியும்! அமைச்சர் கிறிஸ் பில்ப்!

ருவாண்டா புதிய ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் குற்றம் செய்த புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் இங்கிலாந்திற்கு அனுப்ப முடியும் என்று அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை அமைச்சர் கிறிஸ் பில்ப், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் கடுமையான குற்றத்திற்கு தண்டனை பெற்றவர்கள். குடியேற்றத்தை சமாளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் இருந்து ருவாண்டாவிற்கு முன்னர் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் தண்டனையை அனுபவித்த பிறகு மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்பப்படலாம் என்று கூறினார்.

இதற்கிடையில் நேற்று (05.12) புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் தடைப்பட்ட திட்டத்தைப் புதுப்பிக்கும் முயற்சியில், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட, உள்துறைச் செயலர் ஜேம்ஸ் கிகாலிக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!