அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஆராய நடவடிக்கை!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் ஆராய பிரதேச செயலக மட்டத்தில் மேன்முறையீட்டு சபையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நடவடிக்கைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதனிடையே அஸ்வெசும நலன்புரி திட்டங்கள் தொடர்பில் இதுவரை 40000 முறைப்பாடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் எதிர்வரும் 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





