பூமியை நோக்கி நெருங்கி வரும் சிறுகோள் : டைனோஸர் காலத்தில் நிகழ்ந்த அழிவு மீண்டும் வருமா?
100 மீட்டர் அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுகோளுக்கு 2024 YR4 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கோளானது 2032 ஆம் ஆண்டில் பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள விண்வெளி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் அதை தாக்கும் அபாயப் பட்டியல்களில் முதலிடத்தில் வைத்துள்ளனர். இருப்பினும், இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது.
இது போன்ற ஒரு சிறுகோள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்தது. இது டைனோஸர் உள்ளிட்ட இராட்சத உயிரினங்கள் அழிவதற்கு காரணமாக அமைந்தது.
விஞ்ஞானிகள் தாக்குதலின் வாய்ப்புகள் 1% ஐ விட சற்று அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுகோளின் கண்டுபிடிப்பு, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு உலகளாவிய சிறுகோள் மறுமொழி குழுக்களின் செயல்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது.
சர்வதேச சிறுகோள் எச்சரிக்கை வலையமைப்பு இப்போது சிறுகோள் மற்றும் அதன் பாதை குறித்து மேலும் அவதானிப்புகளை மேற்கொண்டு வருகிறது.