ரஷ்யாவின் இராணுவத் தளபதி படுகொலை – உஸ்பெகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது
உக்ரைன் உளவுத்துறையில் பணியாற்றிய உஸ்பெகிஸ்தான் பிரஜை ஒருவர் மொஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைனில் கொல்லப்பட்ட மிக மூத்த ரஷ்ய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரிலோவ் என்று ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.
இந்த கொலைக்கு உக்ரைன் உளவுத்துறை பொறுப்பேற்றுள்ளது.
உக்ரேனிய நடவடிக்கைக்காக தான் மொஸ்கோ வந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)