ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஒன்று சேரும் ஆசியாவின் தலைவர்கள்!

சீனாவின் தலைநகரில் நடைபெறும் இராணுவ விழாவொன்றில் கலந்துகொள்வதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவிற்கு சீட்டாட்ட பாணியில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், மேற்படி மூன்று நாடுகளும் ஒன்று சேர்வது முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், ஒரு ராஜதந்திர ஹெவிவெயிட்டாகவும் பெய்ஜிங்கின் சக்தியை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த சீனத் தலைவர் கடுமையாக முயற்சித்து வருகின்ற சூழ்நிலையில் உலகின் பெருந் தலைவர்களான மூவரும் ஒன்றிணையவுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)