இலங்கைக்கு 30 மில்லியன் டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி வசதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்ய இந்த நிதி வசதி பயன்படுத்தப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் முதல் நிதி வசதி இதுவாகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கங்களாகும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறுகிறது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70% மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய இந்த வேலைத்திட்டமும் முக்கியமானது என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)