Asia Cup – 168 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடி 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.





