AsiaCup – இந்தியாவிற்கு எதிராக 171 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் அணி
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்தது
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ஓட்டங்களுக்கு அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது.





