AsiaCup M11 – 170 ஓட்டங்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. ரஹ்மதுல்லா குர்பாஸ், செதிக்குல்லா அடல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். குர்பாஸ் 14 ரன்னிலும், அடல் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், முகமது நபி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார். 20வது ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.
(Visited 2 times, 2 visits today)