AsiaCup M03 – ஹாங்காங் அணியை வீழ்த்திய வங்காளதேசம்

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் அபுதாபியில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – ஹாங்காங் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அந்த அணியில் ஷீஷான் அலி, நிஷாகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்கள் முறையே 30 ரன்கள், 42 ரன்கள் மற்றும் 28 ரன்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி பேட்டிங் செய்தது.
அணியில் கேப்டன் லிட்டன் தாஸ் அரைசதமடிமத்து அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.