AsiaCup M02 – 57 ஓட்டங்களுக்கு சுருண்ட UAE அணி
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.
போட்டியின் 2வது நாளான இன்று துபாயில் நடக்கும் 2வது லீக்கில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக அலிஷான் ஷரபு, முகமது வசீம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முறையே 22 ரன்கள் மற்றும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் 13.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.





