விளையாட்டு

Asia Cup – இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அதன்படி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களால், இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட முடியவில்லை.

பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 89 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி சார்பில் மதீஷ பதிரன 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 62 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், சதீர சமரவிக்கிரம 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!