விளையாட்டு

Asia Cup – பாகிஸ்தான் அணிக்கு 194 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம் மோதுகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம், மெஹிதி ஹசன் களமிறங்கினர். ஹசன் (0) ரன் எதுவும் எடுக்காமலும், நயிம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

ஆனால், சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சகீப் அல் ஹசன் 53 ரன்களையும், முஷ்பிகூர் ரஹிம் 64 ரன்களையும் சேர்ந்ததனர்.

ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் வங்காளதேசம் 38.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுல்ப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content