Asia Cup M10 – UAEஐ வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பாகிஸ்தான்

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 09 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் பகார் சமான் 50 ஓட்டங்களும் ஷஹீன் அப்ரிடி 29 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
147 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இதனால் பாகிஸ்தான் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.