Asia Cup M01 – முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்
17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தொடங்கியது.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஹாங் காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான்.
இதன் பின் பேட்டிங் இறங்கிய ஹாங் காங் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே ஸ்கோர் செய்ய முடிந்தது. இதனால் முதல் நாள் போட்டியில் சீனாவின் ஹாங்காங் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.
(Visited 4 times, 1 visits today)





