ஆஷ்லே புயல் எச்சரிக்கை : இங்கிலாந்தில் மின்சாரம் துண்டிப்பு!

இங்கிலாந்தை தாக்கிய ஆஷ்லே புயலால் காற்றானது 80 மைல் வேகத்தில் வீசிய நிலையில், பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் வடமேற்குப் பகுதியை மோசமாகப் பாதித்த குறித்த புயலால் டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பெரிய கடலோர அலைகளை ஏற்படுத்தி மக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய அழிவுகரமான காற்று தொடர்பில் வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும் பல முக்கிய விளையாட்டு போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுடன், 29,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததாக ESB நெட்வொர்க்குகள் கூறப்பட்டுள்ளது.
(Visited 82 times, 1 visits today)