ஆசியா செய்தி மத்திய கிழக்கு

பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!

கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், மெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் என கிம் ஜொங் உன் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் திகதி  அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கிக்கப்பலை தனது நாட்டின் கடற்பகுதியில் நிறுத்தும் ஒப்பந்தத்தில் தென்கொரியா கையெழுத்திட்டது.

இது தென்கொரியாவின் மீது அமெரிக்காவின் அணுசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வடகொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜாங் இது குறித்து கூறும்போது ஹதென்கொரியாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி