லண்டன் பொதுவெளியில் பிரபல நடிகரின் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!
பிரித்தானியாவின் லண்டன் நகரில் பிரபல ஹாலிவுட் நடிகர் சிலியின் மர்பி, பொதுவெளியில் சிறுநீர் கழித்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான சிலியின் மர்பி (46) பிரித்தானியாவில் தனது நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்து கொண்டு, அவரக்ளுடன் பேசி மகிழ்ந்தார்.
பப்பில் தன்னை சந்தித்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்த அவர், பிரெஞ்சு ஹவுசில் ஷாம்பெயின் மதுவை அருந்த தொடங்கினார்.
சிலியின் மர்பி சுமார் ஐந்து மணிநேரம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மத்திய லண்டன் இடத்தில் இருந்து வெளியேறியபோது, அருகில் உள்ள சந்துப்பாதையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதுதொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலியின் மர்பி அயர்லாந்தின் டக்ளஸை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.