செய்தி விளையாட்டு

அருணோதயா இந்து கல்லூரியின் மாபெறும் கிரிக்கெட் கொண்டாட்டம்

நுவரெலியா மாவட்டம் வலப்னை கல்வி வலையத்திற்கு உட்பட்ட அருணோதயா இந்து கல்லூரி ஒழுங்கு செய்துள்ள மாபெறும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அருணோதயா இந்து கல்லூரியின் பழைய மாணவர்களுக்காக இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

ACF CHALLENGE TROPHY என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் தொடருக்கான நுழைவு கட்டணம் 2500 ரூபாவாகும்.

அணிக்கு ஏழுப் பேர் கொண்ட இந்த கிரிக்கெட் தொடர் நான்கு ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி இடம்பெறும் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்படும்.

இந்நிலையில், குறித்த கிரிக்கெட் தொடரில் பங்குபெறுதவற்கு விணப்பப் படித்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!