இந்தியா செய்தி

அருணாச்சலப் பிரதேச விபத்து – 7 தொழிலாளர்களின் உடல்கள் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

அருணாச்சலப் பிரதேசத்தில்(Arunachal Pradesh) திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் இறந்த ஏழு தொழிலாளர்களின் உடல்கள், சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின்(Assam) தின்சுகியா(Tinsukia) மாவட்டத்தைச் சேர்ந்த 22 தினக்கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

மீட்பு நடவடிக்கையின் போது, ​​தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொழில்நுட்ப கயிறு மீட்பு முறைகளைப் பயன்படுத்தி உடல்களை மீட்டதாக அஞ்சாவ் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நாங் சிங்னி சௌபூ(Nang Singhni Chaubhu) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீட்புப் பணி கடினமாக இருந்ததாகவும், கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புக் குழு நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும் மீதமுள்ள தொழிலார்களின் உடல்கள் விரைவில் மீட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த லாரி – 18 தொழிலாளர்கள் மரணம்

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!