கணினியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

கணினியைக் கட்டுக்குள் வைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை கூகள் நிறுவனம் உருவாக்குவதாக நம்பப்படுகிறது.
கூகள் Project Jarvis எனும் அந்தத் தொழில்நுட்பத்தைக் டிசம்பர் மாதம் பாவனை அடிப்படையில் காட்சிக்கு வைக்கலாம் என்று The Information எனும் தொழில்நுட்பச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய தொழிநுட்பம் நடப்புக்கு வந்தால், இணையத்தில் தகவல் தேடுவது, பொருள் வாங்குவது, விமானச்சீட்டு வாங்குவது போன்ற வேலைகளை அதுவே சுயமாகச் செய்துவிடும் என்று The Information தெரிவித்தது.
இணையத்தைத் தானாகப் பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை OpenAI நிறுவனமும் ஆராய்வதாகக் கூறப்படுகிறது.
அது ChatGPT கருவியை உருவாக்கியிருந்தது.
(Visited 24 times, 1 visits today)