இலங்கை

14 தங்க பிஸ்கட்டுக்களை கொண்டுவந்த இலங்கையர் கைது!

இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று (27.08) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாக்காக்கில் இருந்து வருகை தந்த அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கொண்டு வந்த சில உடமைகளை மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்தபோது, ​​அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கிலோ 314 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் வர்த்தகர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!