ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயன்ற இலங்கையர் கைது!
போலி விசா மூலம் டுபாய் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உகண்டா பெண்ணொருவருக்கு 35 இலட்சம் ரூபாவை கொடுத்து போலியான விசாவை பயன்படுத்தி அவர் தப்பிச் செல்ல முயன்றது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய குறித்த இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்துள்ளனர்.
இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு உகாண்டா சென்று அங்குள்ள கசினோ கிளப் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அங்கு சந்தித்த நடுத்தர வயது உகாண்டா பெண் ஒருவர், அவருக்கு பிரான்ஸ் செல்வதற்கு விசா தயார் செய்ய முன்வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)





