முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பல் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)





