வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 45 பேருக்கு பிடியாணை!
வங்கதேசத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த மாணவர்களின் கிளர்ச்சியின் போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் உட்பட 45 பேருக்கு வங்கதேச சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வழக்குரைஞர் பி.எம். டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அரசுத் தரப்பு சமர்ப்பித்த இரண்டு மனுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மற்ற நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பாயத்தின் தலைவர் கோலம் மோர்துசா மஜும்தார் ஆகியோர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தனர்.
நாட்டில் வெடித்த மோசமான கலவரங்களை தொடர்ந்து ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஹசீனா நாட்டை விட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் போராட்டக்காரர்கள் மற்றும் பிறரைக் கொன்றதற்கு ஹசீனா, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள்தான் காரணம் என்று வழக்குரைஞர்கள் மனுவில் தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.