தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிரான கைது வாரண்ட் : ஆதரவாளர்கள் மத்தியில் யூன் வெளியிட்ட செய்தி!
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், சியோலின் தலைநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த அவரது பழமைவாத ஆதரவாளர்களுக்கு ஒரு எதிர்மறையான அறிக்கையை வெளியிட்டார்.
அரசுக்கு எதிரான படைகளை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என அவர் சூளுறைத்துள்ளார்.
யூன் சுக் யோல் பிறப்பித்த அவசரகால உத்தரவை தொடர்ந்து அவருக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது.
இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவரை கைது செய்வதற்கு உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்திற்கு ஒரு வார காலம் அவகாசம் உள்ளது. இந்நிலையிலேயே யூனின் கருத்துக்கள் வந்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)