ஐரோப்பா

பாரிஸ் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் 40% விமானங்கள் ரத்து!

பாரிஸ் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் 40% விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கோடைகால பயணக் காலத்தின் உச்சத்தில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தங்கள் திட்டங்களை மறுசீரமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறந்த பணி நிலைமைகளைக் கோரி பிரெஞ்சு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், பாரிஸுக்கு சேவை செய்யும் சார்லஸ் டி கோலே, ஓர்லி மற்றும் பியூவைஸ் விமான நிலையங்களில் வெள்ளிக்கிழமை 40% விமானங்களையும், நைஸில் பாதி விமானங்களையும், மார்சேய், லியோன் மற்றும் வேறு சில நகரங்களில் 30% விமானங்களையும் ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது.

தடுப்பு ரத்துகள் இருந்தபோதிலும், “அனைத்து பிரெஞ்சு விமான நிலையங்களிலும் இடையூறுகள் மற்றும் நீண்ட தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன” என்று ஆணையம் ஒரு அறிக்கையில் எச்சரித்தது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்