ஜம்மு காஷ்மீரில் இராணுவ வாகனம் விபத்து – 10 வீரர்கள் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதேர்வா – சம்பா பகுதிகளுக்கு இடையே உள்ள வீதியில் 09 ஆயிரம் அடி உயரமுள்ள கன்னி டாப் என்ற இடத்தில் இன்று இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
உயரமான இடத்தில் உள்ள இராணுவ முகாம் நோக்கி, குண்டு துளைக்காத இராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மேலும் இதன்போது 11 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.





