வடமேற்கு பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்த இராணுவத்தினர் – 08 போராளிகள் பலி!
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பதற்றமான வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள போராளிகளின் மறைவிடங்களை குறிவைத்து தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் எட்டு போராளிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக ராணுவம் அறிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டாங்க் மற்றும் திரா பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறந்த போராளிகளை “குவாரிஜ்” என்று இராணுவம் விவரித்தது, இது பாகிஸ்தான் தாலிபானுக்கு அரசாங்கம் பயன்படுத்தும் சொற்றொடராகும்.
(Visited 1 times, 1 visits today)