இலங்கை இராணுவத் தளபதிக்கு ஒரு வருட சேவை நீட்டிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கு சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவப் பேச்சாளரின் கூற்றுப்படி, இராணுவத் தளபதி லசந்த ரோட்ரிகோவுக்கு 2025 ஆகஸ்ட் 01 முதல் ஒரு வருட சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சேவை நீட்டிப்பு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ 2024 டிசம்பர் 31 முதல் நியமிக்கப்பட்டார்.
லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ நியமனம் பெறுவதற்கு முன்பு, இலங்கை இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார்
(Visited 2 times, 1 visits today)