செய்தி

உக்ரைனுக்கான ஆயுத கொள்வனவு : ஐரோப்பிய நாடுகளுக்குள் எழுந்துள்ள முரண்பாடு!

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் €90 பில்லியன் கடனில் அமெரிக்காவிடம் இருந்து உக்ரைன் ஆயுதங்களை கொள்வனவு செய்வதை பிரான்ஸ் எதிர்த்துள்ளது.

ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியை ஐரோப்பிய பாதுகாப்புத் துறையில் மட்டுமே செலவிட வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புகிறது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அமெரிக்காவில் இருந்து பாதுகாப்பு சுதந்திரத்தை ஊக்குவிக்கவும், ஐரோப்பாவின் ஆயுத உற்பத்தியாளர்களை வலுப்படுத்தவும் நீண்டகாலமாக கோரி வருகிறார்.

இந்நிலையிலேயே மக்ரோன் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதை எதிர்த்து வருகிறார். இருப்பினும் ஜெர்மனியும், நெதர்லாந்தும் உக்ரைனின் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி ஆயுத கொள்வனவை நியாயப்படுத்துகின்றன.

பேட்ரியாட் ஏவுகணைகளை உக்ரைனுக்கு நன்கொடையாக வழங்கிய ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்கத் தயாரிப்பு அமைப்புக்கு மாற்று வழிகள் எதுவும் இல்லை என்று வாதிடுகின்றன.

“உக்ரைனுக்கும் அவசரமாக மூன்றாம் நாடுகளால் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள், குறிப்பாக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இடைமறிப்பான்கள், F-16 வெடிமருந்துகள் மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் ஆழமான தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் தேவை என அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!