தென் அமெரிக்கா

பிரிக்ஸ் அமைப்பில் இணைய மறுப்பு தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த அர்ஜெண்டீனா!

பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அனுப்பிய கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை அர்ஜெண்டினா நாட்டின் பிரதமர் ஜேவியர் மிலேய் மறுத்துள்ளார். முன்னதாக 6 நாடுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரிக்ஸ் அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இதன் 15வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில் மேற்குலக வணிக நாடுகளை எதிர்கொள்ள கூட்டணியைப் பலப்படுத்துநோக்கில் இன்னும் 6 நாடுகளுக்குக் கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை ஆகஸ்டில் அந்த கூட்டமைப்பின் தலைவர்கள் விடுத்திருந்தனர். இப்போது அந்த அழைப்பை ஆர்ஜென்டீனா மறுத்துள்ளது.

Explained: Why Argentina pulled out of BRICS, explained-why-argentina -pulled-out-of-brics

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களுக்குத் தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து, ‘இதனை உரிய நேரமாகத் தங்கள் நாடு கருதவில்லை’ என ஜேவியர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரவாதக் கட்சியைச் சேர்ந்த மிலேய்,ஏற்கெனவே கோலோச்சி வந்த பாரம்பரிய கட்சிகளைத் தோற்கடித்து கடந்த மாதம் ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தது முதல் அவர் அமெரிக்காவுக்கு ஆதரவான தீவிர நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்.

அவர் சீனா மற்றும் பிரேசில் நாடுகளோடு வியாபார உறவுகளைத் துண்டித்து கொள்ளவிருப்பதாக தேர்தல் பரப்புரையில் கூறியிருந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வந்தபிறகு சமரச போக்கைக் கடைபிடித்து வருகிறார். அதேபோல பிரிக்ஸில் இணைவதில்லை என்பதை அவர் தனது பிரசாரத்திலேயே திட்டவட்டமாக குறிப்பிட்டார். புவிசார் அரசியல் என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் பொருந்துவதே தவிர, கம்யூனிஸ்ட் கூட்டணியோடு அல்ல என்று மிலே தெரிவித்துள்ளார்.

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த