நீண்ட நேரம் அமர்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் – எச்சரிக்கும் சுகாதார நிபுணர்

நீண்ட நேரம் ஒரே நிலை அமர்வது குறிப்பாக கால்களை குறுக்காக வைத்திருப்பது, த்ரோம்போசிஸ் எனப்படும் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர் டிரிஸ்டன் ஹல்பர்ட் எச்சரித்துள்ளார்.
அலுவலகம், வீடு அல்லது ஒன்லைன் கேமிங் அமர்வுகள் என எங்கும் பல மணி நேரம் நகர்வின்றி உட்கார்வது, கால்களில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஆழ நரம்பு த்ரோம்போசிஸ் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம் என அவர் கூறினார்.
இந்த பாதிப்பு ஏற்படுவதனை தடுக்க, கால்களை தரையில் தட்டையாக வைத்திருக்க வேண்டும், ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் எழுந்து நடக்க வேண்டும். கால்களை நேராக நீட்டி, கணுக்கால்களை சுழற்றவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் என ஹல்பர்ட் பரிந்துரைக்கிறார்.
பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 பேர் இரத்தக் கட்டிகளால் உயிரிழக்கின்றனர் என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவி பெற பரிந்துரை செய்யப்படுகிறது.