வாழ்வியல்

அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் உங்களால் நிகழ்காலத்தில் இருக்க முடியவில்லை என்றால் அப்போ நீங்க இந்த பதிவ வாசிங்க…

பெரும்பாலும் நாம் அதிகமா யோசிப்பது நம்முடைய நிகழ்காலத்தைப் பற்றி இருக்கும் அல்லது எதிர்காலத்தை பற்றி இருக்கும். இரவு நேரங்களில் கூட பாதியிலே எழுந்திருக்கும் நிலைமை கூட ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அளவுக்கு அதிகமாக நாம் யோசிக்கும்போது பதட்டம் மன உளைச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது மூளையையும் பாதிக்கும். எனவே அதிலிருந்து வெளிவர இந்த முறைகளை கையாளுங்கள்.

  1. முதலில் நம்மை நாமே மன்னிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு செயலை நாம் செய்து அது தவறாக முடிந்து விட்டால், அதற்காக உங்களை நீங்களே திட்டிக் கொள்வது, காயப்படுத்துவது போன்றவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் தான்  நம்மை காயப்படுத்துகிறார்கள் நாமாவது நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம். சுருக்கமாக கூற வேண்டும் என்றால் காயப்படுத்த தான் மத்தவங்க இருக்கிறார்களே நாமளும் ஏன் நம்மை காயப்படுத்தி கொள்ள வேண்டும். இதை நாம் யோசிக்க வேண்டும்.
  2. உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். அதாவது உங்களுக்கு பிடிக்காத நபரை திட்ட வேண்டும் என்றால் அதை ஒரு பேப்பரில் எழுதி நெருப்பில் எரித்து விட வேண்டும். இவ்வாறு நம் கோபத்தை வெளிப்படுத்தி விட்டால் நம் மனம் தேவை இல்லாமல் யோசிக்காது.
  3. மற்றவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். நாம் ஒரு செயலை செய்யும் போது மத்தவங்க என்ன நினைப்பார்கள் என அறியும் மனநிலையிலிருந்து முதலில் வெளிவர வேண்டும். வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் இன்பங்களையும் நீங்கள் மட்டும்தான் அனுபவித்தே ஆக வேண்டும். நீங்கள் துன்பப்படும்போது மற்றவர்கள் அதை வாங்கிக் கொள்ளப் போவதில்லை. எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
  4. அடிக்கடி வெளியில் பயணம் செய்வது நம் மனதை புத்துணர்வுப்படுத்தும். ஒரே அறையில் இருக்கும் போது அதன் சிந்தனைகளை வந்து கொண்டே இருக்கும். பயணிக்கும் போது பல அனுபவங்களை பயணம் கற்றுக் கொடுக்கும்.
  5. ஓவர் திங்கிங் இருப்பவர்கள் எப்பொழுதுமே ஏதேனும் ஒரு வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு வேலையில் நம் கவனம் செலுத்தினால்  வேலையில் தான் கவனம் இருக்கும். இது தேவையில்லாமல் வரும் சிந்தனைகளை தடுக்கும். மேலும் எதிர்மறை எண்ணங்களை நாம் அறவே அகற்ற வேண்டும். உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை ஒரு பேப்பரில் எழுதி அதையும் எரித்து விட வேண்டும்.
  6. நிறைய புதுமையான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் உணவில் புரதம் மற்றும் ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் இது மூளையின் செயல்பாட்டை திறனை ஒழுங்குபடுத்தும்.
  7. உங்களுக்குப் பிடித்த விளையாட்டை அரை மணி நேரமாவது விளையாடுங்கள் அல்லது தியானம் முறைகளை கையாளுங்கள். ஏனெனில் தியானத்திற்கு அவ்வளவு சக்திகள் உள்ளது. பூக்கள் மலரும் சத்தம் கூட நாம் தியானிக்கும் போது கேட்கும் என கூறுகிறார்கள்.
  8. நமக்கு ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கும் அதை நாம் அறிய வரும்போது நம் மனம் லேசாகிவிடும் எனவே “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என கடந்து விட வேண்டும்.

இதில் பிடித்த முறைகளை பின்பற்றி பயனடையுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றாவது ஒரு நல்ல தீர்வாக அமையும்.

thank you

dinasuvadu

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான