அதிகமாக நடப்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்

அதிகமாக நடந்து கொண்டே இருக்கிறேன் என்று நீங்கள். அப்படியானால் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் அவ்வளவு எளிதாக உங்களுக்கு ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
நடந்தோ, சைக்கிளிலோ, பொது போக்குவரத்து வாகனத்திலோ பணிக்கு செல்வோரை விட, பைக் அல்லது காரில் பணிக்குச் செல்வோருக்கு நீரிழிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது தினசரி நடவடிக்கையில் இருக்கும் உடல் இயக்கத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
எனவே, எப்போதும் பைக்கிலோ அல்லது காரிலோ அலுவலகம் செல்பவர்கள் ஒரு நாள் பொது போக்குவரத்தில் செல்லலாம். அல்லது அலுவலகத்தில் இருக்கும் படிகட்டுகளைப் பயன்படுத்தி மாடிகளுக்கு செல்லலாம்.
உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வுகள்.
அதிகமாக நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான். அதுவே, மன அமைதியும் வேண்டும் என்றால், பசுமையான இடங்களில் நடந்து பாருங்கள். மன அழுத்தம் குறைந்து நிம்மதியும் கிடைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.